×

விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் மகா சிவராத்திரி தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியாஞ்சலி சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி

தஞ்சை, மார்ச் 12: 100 சதவீதம் வாக்களிப்போம் குறித்த மகளிர் சுய உதவி குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றனஅதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்ட பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார்,இப்பேரணியில் கலந்துகொண்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம், நமது வாக்கு நமது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல தவறாமல் வாக்களிப்போம் அச்சமின்றியும், எந்தவொரு தூண்டுலுக்கும் உட்படாமலும் நேர்மையாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ரயில்வே நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பனகல் கட்டிடத்தில் முடிவடைந்தது.

பின்னர் நிருபர்களிடம், கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்ததாவது,தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 பறக்கும் படையினர், 8 நிலையான கண்காணிப்பு குழு மூலம் வாகன தணிக்கையின் போது ஆவணமின்றி எடுத்து செல்ல பட்ட ரூ.42 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, சுவர் விளம்பரம் இதுவரை தேர்தல் சார்ந்த விளம்பரங்கள் அனுமதியின்றி செய்யப்பட்டதற்காக வழக்குகள் பதிவாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் அதனை உடனடியாக விடுவிக்கப்படும் என்றார்.

முன்னதாக 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.தேஷ்முக் சஞ்சய் சேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மகளிர்திட்டம் திட்ட அலுவலர் கதிரேசன், கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Farmers' Union ,Maha Shivaratri Tanjore Big Temple Awareness ,Natyanjali Assembly elections ,
× RELATED மோடியை எதிர்த்து போட்டியிட வாரணாசி...