×

திருச்சி தேசியக்கல்லூரியில் முதல் மாதிரி தேர்வு துவக்கம்

திருச்சி, மார்ச்10:தமிழ்நாடு அரசு ஆணைப்படி திருச்சி, தேசியக் கல்லூரியில் வகுப்புகள் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவா–்களுக்கு டிசம்பர் 2, 2020 அன்றும், மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவா–்களுக்கு டிசம்பா் 7, 2020 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதனை தொடா்ந்து அரசு ஆணைப்படி பிற வகுப்புகளுக்கும் ஜனவரி 18, 2021 முதல் வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக முதல் மாதிரி தோ்வு இன்றிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆரம்பமாகிறது.

மாணவ, மாணவிகள் அக்கறையுடன் எழுதினர். கல்லூரி முதல்வா் சுந்தரராமன் பார்வையிட்ட பொழுது மாணவ, மாணவிகளிடம் கேட்டதில் நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் தான் தோ்வு எழுதுகிறோம் என்பதை கூறினா்.அனைத்து மாணவ, மாணவிகளும் விடுமுறை எடுக்காமல் தோ்வில் கலந்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என கல்லூரி முதல்வர் கூறினார்.

Tags : Trichy National College ,
× RELATED ஆளுநருக்கு கருப்புக்கொடி