தாரமங்கலம் அருகே இருதரப்பு மோதலில் 8 பேர் மீது வழக்கு

தாரமங்கலம், மார்ச் 9: தாரமங்கலம் அருகே அத்திராம்பட்டியில், மந்தை மாரியம்மன் கோயில் விழாவையொட்டி பூசாட்டுதல் தொடங்கியது. பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளது. நேற்று அதிகாலை, வழக்கம் போல கோயிலில் பூஜை நடந்தது. அப்போது சுவாமி கும்பிட, அதே பகுதியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மாரிமுத்து என்பவரின் மனைவி கம்சலா வந்துள்ளார். அப்போது கோயிலுக்கு நாங்கள் தான் காலம் காலமாக பூக்கள் வாங்கி கொடுத்து, பண்டிகை நடைபெறும். இந்த ஆண்டு எங்களை கேட்காமல் நடத்தியுள்ளீர்கள் என கேட்டு, கோயி பூசாரி சண்முகம் என்பவரை மாரிமுத்து மற்றும் அவருடைய மனைவி கம்சலா ஆகியோர் தாக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்த சண்முகம், பாலு, தங்கம்பிள்ளை, சாந்தி, வெங்கடாசலம், பூங்காவனம் ஆகியோர் மாரிமுத்து கம்சலாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து, இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், 8பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: