×

திருப்பத்தூரில் ஐலசா…ஐலசா… குப்பைகளுடன் நகராட்சி வாகனத்தை தள்ளிச்சென்ற தூய்மை பணியாளர்கள்: வீடியோ வைரல்

 

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் குப்பைகளை ஏற்றி வந்து பழுதாகி நின்ற வாகனத்தை தூய்மை பணியாளர்கள் தள்ளியபடி ெசன்ற வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் 36 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை நாள்தோறும் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு அதன்மூலம் சேகரிக்கப்பட்டு பின்னர் குப்பை கிடங்கு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கம்போல நேற்று நகராட்சி அலுவலகத்தில் இருந்து குப்பைகளை சேகரிக்க அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நடுரோட்டில் குப்பைகளை ஏற்றி வந்த லோடுவேன் திடீரென பழுதாகி நின்றது. அதனை தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் வரை தள்ளிச்சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Ilsa ,Tirupathur ,Jolarpet ,Tiruppatur ,
× RELATED கோவில்பட்டியில் போலி ரசீது...