×

அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு; விசாரணை குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு!

 

சென்னை: அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த வழக்கில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளார். அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 பேரில் 7 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 பேர் உயிரிழந்துள்ளார். அமோனியா வாயு கசிவு பாதிப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு பெரியபாளையத்துக்கு விரைந்துள்ளது.

இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த வழக்கில் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர்கள் தலைமையில் விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கை மற்றும் 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் மோகன் (59) மற்றும் மேலாளர் டேனியல் (68) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : TAMIL NADU ,Chennai ,Tamil Nadu government ,Department of Occupational Safety and Health ,Beriyapaliam ,
× RELATED பெரியபாளையம் அருகே இறால்...