×

மார்த்தாண்டத்தில் மர்ம பைக்

மார்த்தாண்டம், மார்ச் 6: மார்த்தாண்டம்  மெயின் ரோட்டில் சாலையோரம் கடந்த 5 நாட்களாக ஒரு பைக் நின்றது. கேரள  பதிவெண் கொண்ட பைக் தொடர்ந்து அதே இடத்தில் நின்றதால் அந்த பகுதியில்  உள்ளவர்கள் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு  சென்று பைக்கை சோதனையிட்ட போது, அதில் எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து  பைக்கை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த பைக் யாருடையது?  இங்கு எப்படி வந்தது? திருடப்பட்டதா அல்லது ஏதாவது குற்றச்செயல்களுக்கு  பயன்படுத்தி விட்டு இங்கு விட்டு சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Martha's Vineyard ,
× RELATED மார்த்தாண்டத்தில் சாலையை சீரமைக்க கோரி காங். மறியல் 52 பேர் கைது