×

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி வரவேற்பு!

டெல்லி: அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். கடும் பொருளாதாரச் சீர்குலைவு, பல உயிரிழப்புகளுக்குக் காரணமான மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன். அமைதியை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் இது உதவும் என நம்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்;

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தியதும், பல நாடுகளில் உயிரிழப்புகளுக்குக் காரணமானதுமான மேற்கு ஆசியப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்.

இந்தப் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது. மீதமுள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு நிலையான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Modi ,United States ,Iran ,Delhi ,United ,States ,
× RELATED அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி...