×

காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 அளிக்காத விற்பனையாளரின் மண்டை உடைப்பு

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சியில் சி.சி. சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சூப்பர்வைசர்கள் மகாதேவன், தேவதாஸ், விற்பனையாளர்கள் ஏழுமலை, குமார், பூங்காவனம், ஜெய்சங்கர், ராமு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை கடையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த போளூரை சேர்ந்த சின்னதம்பி என்ற குடிமகன், வேறு கடையில் வாங்கிய காலி பாட்டிலை கொண்டு வந்து, அதற்கான ரூ.10 ஐ வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் ஏழுமலை இது எங்கள் கடையின் பாட்டில் அல்ல. எனவே, பணம் வழங்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, கையில் இருந்த மது பாட்டிலால் ஏழுமலையை தாக்கியுள்ளார்.

அந்த பாட்டில் உடைந்ததும், மற்றொரு பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது. தகவலறிந்து போளூர் தாலுகாவில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் உடனடியாக மூடப்பட்டன.

Tags : Bolur ,TASMAC ,C.C. Road ,Bolur Municipality, Tiruvannamalai District ,Mahadevan ,Devadas ,Ezhumalai ,Kumar ,Poongavanam ,Jaishankar ,Ramu ,
× RELATED விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில்...