×

தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் விவசாயிகள் மறியல்

 

திருத்துறைப்பூண்டி: தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் மாவட்டம் தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பிச்சன்கோட்டகத்தில் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராயநல்லூர், கடியாச்சேரி, ஆலத்தம்பாடி, மணலி, பாமணி, நெடும்பலம் உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : Thiruvarur ,Teva government ,Thiruthuraipoondi ,Tamil Nadu Farmers' Union ,Chief Minister ,Vijay ,Tamil Nadu government ,
× RELATED மன்னார்குடி அருகே குடிருப்பு பகுதியில் தீ விபத்து