- திருப்பதி
- காட்பாடி
- தெற்கு ரயில்வே
- சென்னை
- திருப்பதி-காட்பாடி
- தெற்கு ரயில்வே துறை
- திருப்பதி-காட்பாடி எக்ஸ்பிரஸ்
சென்னை: திருப்பதி – காட்பாடி பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு காலை 6:40 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் மெமு ரயில் வரும் 19,22,26,29 மற்றும் ஜூலை 3,6,10,13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இரவு 7:25 மணிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரயில் வரும் 19,22,26,29 மற்றும் ஜூலை 3,6,10,13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு காலை 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரயில் வரும் 19,22,26,29 மற்றும் ஜூலை 3,6,10,13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு மாலை 5:15 மணிக்கு புறப்படும் பயணிகள் மெமு ரயில் வரும் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு காலை 5:40 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 19, 22, 26, 29, ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் காட்பாடி – திருப்பதி இடையே ரத்து செய்யப்பட்டு காட்பாடியுடன் நிறுத்தப்படும். திருப்பதியில் இருந்து விழுப்புரத்திற்கு மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 19, 22, 26, 29, 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் திருப்பதி – காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. காட்பாடியில் இருந்தே விழுப்புரம் நோக்கி புறப்படும் என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
