×

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் குளறுபடி..? மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்

டெல்லி: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த கடைபிடிக்கப்படும் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் எனப்படும் டிஜிட்டல் முறை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. அண்மையில் வெளியான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஓஎஸ்எம் எனப்படும் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் டிஜிட்டல் காரணமாக எதிர்பார்த்ததை விட குறைவாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுகளில் வென்ற மாணவர்கள் கூட மிக குறைந்த மதிப்பெண்களை பெற்று இதில் தேர்ச்சி பெறாமல் போனது சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

மாணவர்களின் கவலையை போக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் விடைத்தாள் நகல் பெறும் கட்டணத்தை 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைத்த போதிலும் அதற்காக விண்ணப்பிக்கும் சிபிஎஸ்இ இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மாணவர்களை மேலும் தவிக்க விட்டுள்ளது. இந்த ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையால் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறும் கல்வியாளர்கள் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த தேர்வு முடிவுகள் வந்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள் விடைத்தாளை மீண்டும் திருத்தம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Tags : CBSE ,Delhi ,
× RELATED வெளிநாடுகளில் சுற்று பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி