×

சிதம்பரம் பேருந்து நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பழைய பேருந்து நிலைய கட்டிடம் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேலானதால், அது முற்றிலும் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் கடந்த காலங்களில் கட்டிடத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து பயணிகள் பலர் காயமடைந்தனர். அதனைத் தொடந்து ஆபத்தான நிலையில் இருந்த இக்கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலைய வளாகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை அடுத்து பயணிகளின் வசதிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய நிழற்குடை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் பல்வேறு காரணங்களால் தற்போது இந்த கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி, பேருந்து நிலைய கட்டுமான பணியை மழை காலம் வருவதற்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags : Chidambaram ,Chidambaram, Cuddalore district ,
× RELATED சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே...