×

குளச்சல் பகுதியில் பலத்த காற்று: கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

 

குளச்சல்: குளச்சல் கடற்கரை கிராமத்தில் விசைப்படகுகள்,வள்ளம்,கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன.இந்நிலையில் தென் தமிழக கடற்கரை,குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ.வரையிலும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை பலத்த காற்று வீசும் எனவும் , மீனவர்கள் 15 ம் தேதி முதல் 20 ம் தேதிவரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலை எச்சரிக்கை மீன் துறை மூலம் அனைத்து மீனவர் கிராமங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விடுகிறது. இதனால் வள்ளம்,கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குளச்சல் கடற்கரையில் மாலை வேளைகளில் பொழுது போக்கிற்காக பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து செல்வதுண்டு.

அவர்கள் ஆர்வ மிகுதியில் அலை வந்து செல்லும் பகுதிக்கு செல்லாமலிருக்க குளச்சல் மரைன் போலீசார் கடற்கரை நுழைவு வாயிலில் கயிறு கட்டி அதில் சிவப்பு துணி கட்டி கடற்கரைக்கு செல்ல தடை விதித்துள்ளனர். மேலும் கடற்கரையில் பாதுகாப்புக்கு மரைன் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Kachal ,Kulachal ,South Tamil Nadu, ,Kumari Sea ,
× RELATED காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில்...