×

தவெக-விற்கு ஓட்டு போட்டுவிட்டு ஏன் போட்டோம் என இப்போது வருந்தி, புலம்பும் வாக்காளர்கள்.!! முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர், தேர்தலின் போது தீய சக்தி, தூய சக்தி என்றல்லாம் பிரச்சாரம் செய்தவர் தற்போது தூய சக்தி என்ற தன்னுடைய முகமூடியை விலக்கி கொண்டிருக்கிறார்.

தன்னை தூய சக்தி என்று சொல்லி கொண்ட அவர் அந்த அடையாளத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்கிறார். மக்கள் அவருக்கு வழங்கி இருக்கும் தீர்ப்பு என்பது தனிப்பெரும் கட்சி தானே தவிர, பெருபான்மை ஆதரவு கொண்ட கட்சி என்பதல்ல. எங்களை தீய சக்தி என்று சொல்லிவிட்டு எங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களின் ஆதரவில் தான் ஆட்சியமைத்து இருக்கிறார்.

எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் ஆதரவை கேட்ட போது, என்டிஏ கூட்டணியில் இருந்து ஆதரவு கேட்க மாட்டேன் என சொல்லிவிட்டு அமமுக கட்சியில் இருந்த எம்எல்ஏ காமராஜின் ஆதரவை பெற்றிருக்கிறார். இதை தவிர அதே கூட்டணியில் இருக்கும் அதிமுக-வில் இருக்கும் ஒரு பிரிவினரின் ஆதரவையும் சேர்த்து பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர்கள் இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கலாம், ஆனால் அவர்களுடைய ஆதரவை பெற்றதன் மூலம் தான் தூயசக்தி இல்லை குதிரைபேர சக்தி என்று நிரூபித்து இருக்கிறார் என்று சாடி இருக்கிறார்.

Tags : Daveka ,Former ,Minister ,Sivasankar ,Chennai ,Sivashankar ,
× RELATED சட்டப்பேரவையில் தவெக அரசுக்கான பெரும்பான்மையை நிரூபித்தார் விஜய்