×

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது..!!

டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் 2026 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கு தங்கள் பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்துகொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

Tags : CBSE ,Delhi ,CPSE ,Union Board of Secondary Education ,grade ,nationwide ,
× RELATED தவெக அரசை ஆதரித்த வேலுமணி தரப்பு...