×

அமெரிக்க அரசுக்கு எதிராக பொய் செய்தி பரப்புவோர் முட்டாள்கள் – டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் தொடர் பதற்றங்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சில அமெரிக்கக் குடிமக்களை ‘கோழைகள்’ என்று முத்திரை குத்தியதுடன், அவர்கள் ஈரானுக்குத் தவறான முறையில் ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Truth Social-ல் வெளியிட்ட ஒரு பதிவில், டொனால்ட் டிரம்ப் தனது எதிராக செய்திகளை பரப்பும் அமெரிக்க ஊடகங்களையும், விமர்சகர்களையும் கடுமையாகத் தாக்கி கருத்து பதிவிட்டு உள்ளார். ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக ராணுவ ரீதியாகச் சிறப்பாகச் செயல்படுவதாகச் சித்தரிக்கும் முயற்சிகள் போலிச் செய்திகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு பொய்யான கூற்றை முன்வைக்கும் எந்த ஒரு அமெரிக்க நபரும் தேசத்துரோகத்திற்கு இணையான ஒரு செயலை செய்வதாகவே கருதுகிறேன் என்றார். இத்தகைய போலி செய்திகள் ஈரானுக்குப் பொய் நம்பிக்கையை ஊட்டுவதுடன், அமெரிக்காவின் எதிரிகளின் மன உறுதியையும் அதிகரிக்க செய்கின்றன. இப்படி தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் கோழைகள் என்றும், அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராகவே நிற்கிறார்கள் என்றும் சாடியுள்ளார்.

உண்மையில் ஈரானின் கடற்படை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. அந்நாட்டின் வசம் இருந்த 159 கப்பல்கள் தற்போது கடலின் ஆழத்தில் மூழ்கிவிட்டன. மேலும் ஈரானின் விமானப்படை, அதன் தொழில்நுட்பம் மற்றும் தலைமை முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக திட்டவட்டமாகக் கூறினார். ஈரான் தற்போது பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்திக்கும் நிலையை அடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக டொனால்ட் டிரம்ப் தனது எதிர்ப்பாளர்களை ‘முட்டாள்கள்’, ‘நன்றியற்றவர்கள்’ மற்றும் ‘தோல்வியாளர்கள்’ என்று கூறி இருக்கிறார்.

Tags : Trump ,US government ,Washington ,US ,Iran ,President ,Truth Social… ,
× RELATED நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது..!!