×

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரவேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 2ஆம் நாள் அமர்வு இன்று கூடியது. சட்டசபையில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார், துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த அவை மாண்புமிகு அவை என்றும் முன்னாள் முதலமைச்சர்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளனர் என்று கூறி தனது உரையை தொடங்கினார்.

பிரேமலதா சில கோரிக்கைகளை சட்டசபையில் முன்வைத்தார். பின்னர் ஆணாக இருந்தாலும் இந்த சபைக்கு அன்னையாக இருந்து அனைவருக்கும் சபாநாயகர் சமமாக வாய்ப்பு வழங்க வேண்டும். இன்றைய முதல்வர் அன்பு தம்பி விஜய் அவர்களுக்கு திரையுலகில் அண்ணனாக இருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இதே அவையில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட போது கூறியது போல் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று பிரேமலதா கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழ்நாட்டில் இனி நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தார்.

 

 

Tags : Premalatha Vijayakanth ,Tamil Nadu ,Chennai ,Assembly ,Speaker ,J. C. D. Prabhakar ,Ravishankar ,M. L. A. ,Demutika ,Secretary General ,
× RELATED படப்பை அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் தப்பினர்