×

செங்குன்றம் ஏரி மதகு பகுதியில் மேம்பாலத்தின் நடுவே விரிசல்: பயணிகள் அச்சம்

புழல்: சென்னை புழல் ஏரி மதகு அருகே பழமைவாழ்ந்த மேம்பாலம் நடுவே விரிசல் பாலம் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் ஆந்திராவில் இருந்துவந்த லாரி சென்றபோது இடிந்து விழுந்தது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது கலைஞர் முதல்வராக இருந்தபோதுபாலம் புதுப்பிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

தற்போது செங்குன்றம் நெல் மார்க்கெட்டில் வரும் வாகனங்கள் மார்க்கெட்டில் நிற்பதற்கு உரிய இடமில்லாததினால் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் நெல் மூட்டைகளுடன் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்பட்டு வருவதால் பாலம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது செங்குன்றம் காமராஜர் சிலையில் இருந்து சென்னை புழல் நோக்கி செல்லும் திசையில் பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு பாலம் இடிந்து விழும் நிலைமையில் உள்ளது. ‘’பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சரிசெய்யவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூகநல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

Tags : Chengunram Lake Gate ,Puzhal ,Puzhal Lake Gate ,Chennai ,Andhra Pradesh ,
× RELATED படப்பை அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் தப்பினர்