×

3 நாடுகள் மீதான டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்

ரியாத்: குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் நிலப்பகுதிகள் மற்றும் கடல் எல்லைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதல்களுக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று குவைத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான ஊடுருவல்களைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குவைத் நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்றும், சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிகாலையில் வான்வெளியில் பல ஆளில்லா விமானங்கள் ஊடுருவியதை உறுதிப்படுத்திய குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் முந்தைய அறிவிப்பைத் தொடர்ந்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனை ஈரான் நடத்தியிருக்க கூடும் என அந்நாடுகள் சந்தேகம் தெரிவித்து உள்ளன.

Tags : Saudi Arabia ,Riyadh ,Kuwait ,Qatar ,United Arab Emirates ,UAE ,
× RELATED அமெரிக்காவில் பயங்கரம் புளூ ஆரிஜன்...