×

கல்வி உலகின் இமயம் சரிந்தது: மீனா முத்தையா மறைவுக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் இரங்கல்

டெல்லி: செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவுக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்திக்குறிப்பில்:
கல்வி உலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து வந்த மீனா முத்தையா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைகிறோம். கல்வி உலகில் யாரும் தொட முடியாத இடத்தை தமிழ்நாட்டில் இருந்து தொட்டவர். செட்டிநாடு கல்விக் குழுமத்தில் பயின்று உலகம் முழுக்க அவரது மாணவர்கள் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க ஒரு மாமனிதரை இன்று இழந்து நிற்கிறோம்.

சாதி மத பேதமின்றி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். பள்ளி குழந்தைகளிடம் ஒரு குழந்தையாகவே மாறி பழகும் இயல்பு கொண்டவர்; மனிதநேயமிக்கவராக வாழ்ந்த அம்மையாரின் இழப்பு 40 ஆண்டுகால எங்கள் குடும்ப நண்பர் என்பதில் பேரிழப்பு. அவரது ஆன்மா அமைதியின் நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

Tags : Indian Hajj Association ,Meena Muttiah ,Delhi ,Hajj Association of India ,Kumara Rani ,Dr. ,Meena Muthaiah ,Chetindanadu ,
× RELATED முத்துப்பேட்டை அருகே மூலிகைச்செடி...