×

பெரம்பலூர் சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

பெரம்பலூர், ஏப். 30: பெரம்பலூர் சிவன்கோயில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி துறையூர் சாலையில் அமைந்துள்ள, அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று(29ஆம் தேதி) சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாலை 4:30 மணிமுதல் 6:30 மணியளவில் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகம் முடிந்த பிறகு மகா தீபாராதனைக் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சிவனடியார்கள், திரளான பொதுமக்கள், கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர். ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் உட் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை கௌரி சங்கர் மற்றும் முல்லை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

 

Tags : Nandi ,Perambalur Sivan Temple ,Perambalur ,Pradhosh ,Sivankoil, Perambalur ,Chitra Mata ,Pradosha ,Agilandeshwari ,Sameda Brahmapuriswarar ,Temple ,Dharaiur Road ,Perambalur Municipality ,
× RELATED சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களில்...