×

அதிரடி ஐபிஎல்லிலும் ‘புஸ்ஸ்ஸ்’ முதலிடத்தில் நீடிக்கும் ஆர்சிபி

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த ஸ்ேகார் எடுத்த அணி என்ற பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அதிரடி ஆட்டங்களுக்கு பெயர் போன ஐபிஎல்லில் சில நேரங்களில் வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த சோக சம்பவங்களும் நடந்ததுண்டு.

* அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 49 ரன்களை அடித்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட குறைவான ஸ்கோர் ஆகும்.
* 2009ஆம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 58 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* 2017ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணி 66 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* 2008ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 67 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* 2017ஆம் ஆண்டில் ரைஸ்ஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 73 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* ஐபில் நடப்பு தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்த்து களமிறங்கிய டெல்லி அணி 75 ரன்களில் சுருண்டது.
* 2013ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 79 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்
* 2022ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 82 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* 2018ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி 87 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* 2019ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி 96 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.
* இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 100 ரன்களை அடித்தது. இதுவே இந்த அணியின் குறைந்த ஸ்கோர்.

Tags : RCB ,IPL ,Mumbai ,Royal Challengers ,Bangalore ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்