சென்னை: இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையில் 43 சதவீதத்துடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தேசிய புள்ளியியல் ஆய்வகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் தான் 43 சதவீதம் பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் அரசு மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையே இத்தகைய சாதனைக்கு காரணம்
