×

மது விற்ற முதியவர் கைது

சிவகாசி, ஏப்.23: சிவகாசி அருகே, அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி பகுதியில் திருத்தங்கல் காவல் நிலைய எஸ்ஐ பிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காளியம்மன் கோவில் ரோட்டில் சென்றபோது, முதியவர் ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது, அவர் காளையார்குறிச்சியை சேர்ந்த வாழையப்பன் (69) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

 

Tags : Sivakasi ,Thirudhangal police station ,SI Prakash ,Sukhravarpatty ,Sivakasi, Virudhunagar district ,Kaliamman Temple Road ,
× RELATED தடையை மீறி பட்டாசு உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு