×

வாக்குச்சாவடிகளில் நிழற்பந்தல்கள்

தேவாரம், ஏப். 23: கம்பம் சட்டசபை தொகுதியில் வெப்பத்தை தணிக்க பூத்களில் நிழற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பம் சட்டசபை தொகுதியில் உத்தமபாளையம், சின்னமனூர், கோம்பை, தேவாரம் , பண்ணைப்புரம், மேலசிந்தலை சேரி, ராயப்பன் பட்டி, உள்ளிட்ட இடங்களில் 345 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கடும் வெப்பம் காரணமாக வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், நிழற்கூடம் இல்லாத இடங்களில் பந்தல்கள் சாமியானாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் வயதானவர்கள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாத வகையில் வாக்களிக்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல் குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக வயதானவர்கள் நிற்க முடியாத வகையில் இருந்தால் உடனடியாக வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags : Shade ,Thevaram ,Cumbum assembly ,Uttampalayam ,Chinnamanur ,Gombai ,Pannapuram ,Melachinthalai Cheri ,Rayappan Patti ,
× RELATED மது விற்ற முதியவர் கைது