×

டூவீலர் மோதி தொழிலாளி பலி

சிவகாசி, ஏப்.23: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பாரைப்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ் (70). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சாத்தூர் ரோடு பாரைப்பட்டி பகுதியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருப்பதி நகரை சேர்ந்த கருப்பசாமி (50) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், தேவராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின், மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தெரடர்பாக கருப்பாமி மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Devaraj ,Paraipatti ,Virudhunagar district ,Sattur Road Paraipatti ,Karuppasamy ,Tirupati Nagar ,
× RELATED மது விற்ற முதியவர் கைது