×

காங்கயம் தொகுதியில் 2 ‘பிங்க் பூத்’

காங்கயம், ஏப்.23: காங்கயம் தொகுதியில், பெண்களை கவுரவிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தால் பிரத்யேக ‘பிங்க் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் முழுவதும் வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், போலீசாரும் பெண்களே.

காங்கயம் தொகுதியில் காளிமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள 168ம் எண் கொண்ட வாக்குச்சாவடியும், வெள்ளகோவிலில் அமலா அன்னை மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உள்ள 295வது எண் கொண்ட வாக்குச்சாவடியும் `பிங்க் பூத்’களாக அமைக்கப்பட்டுள்ளன. பெண்களின் வாக்குகளை ஊக்குவிக்கவும், அவர்களை தேர்தல் செயல்முறையில் பங்கேற்கச் செய்யவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

 

 

Tags : Pink Booths' ,Kangayam ,Pink Booth ,Election Commission ,
× RELATED ஆழியாற்றில் மூழ்கி திருப்பூர் கல்லூரி மாணவர் பலி