×

பா.ஜ, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது குண்டு வீச்சு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் உள்பட 10 பேருக்கு 25 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள ஆலக்கோடு பகுதியில் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஜ, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆலக்கோடு போலீசார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினு, பிரதீப் குமார், சத்யன், பாபுராஜ், வினோத்குமார், விஜயன், சுரேஷ், டோபி, சிவப்பிரகாஷ், ஜனார்தனன் ஆகிய 10 பேரை கைது செய்தனர். இவர்களில் பாபுராஜ் தற்போது ஆலக்கோடு பஞ்சாயத்து சிபிஎம் கவுன்சிலராக உள்ளார். இந்த வழக்கு விசாரணை தளிப்பறம்பு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட 10 சிபிஎம் தொண்டர்களுக்கும் நீதிபதி பிரசாந்த் 25 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags : BJP ,RSS ,Thiruvananthapuram ,Alakode ,Kannur ,Kerala ,
× RELATED பொம்மை கார்களில் வெடிகுண்டு 4 தீவிரவாதிகள் டெல்லியில் கைது