- காங்க்
- உச்ச நீதிமன்றம்
- பவன் கெரா
- அசாம்
- புது தில்லி
- பவங்கரா
- பிரதம
- அமைச்சர்
- ரினிகி புயன் சர்மா
- சர்மா
- சட்டசபை
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரான பவன்கேரா கடந்த 5ம் தேதி செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அசாம் முதல்வரின் மனைவி ரினிகி புயான் சர்மாவிடம் பல பாஸ்போர்ட்களும், வெளிநாடுகளில் சொத்துக்களும் இருப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்காக முதல்வர் சர்மா தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் இது அறிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த அசாம் முதல்வர் சர்மா இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒரு வார கால இடைக்கால முன்ஜாமீன் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கடந்த 15ம் தேதி வரை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.
இந்நிலையில் ஏப்ரல் 20ம் தேதி வரை தன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று பாதுகாப்பு கோரி பவன் கேரா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு மறுத்துவிட்டது. முன்ஜாமீன் பெறுவதற்காக அசாமில் உள்ள உரிய அதிகார வரம்பை கொண்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் கேராவுக்கு அறிவுறுத்தியது.
