- கொல்கத்தா
- ரியல் எஸ்டேட் நிறுவனம்
- மெர்லின் ரியல் எஸ்டேட் குழு நிறுவனங்கள்
- மெர்லின் ப்ரொஜெக்ட்ஸ் லிமிட
- சுஷில் மோதா
- சகேத் மோட்டா
கொல்கத்தா: கொல்கத்தா மெர்லின் ரியல் எஸ்டேட் குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள பிரபலமான மெர்லின் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் குழுமம் அதன் நிறுவனர்களான சுஷில் மோத்தா, சாகேத் மோத்தா ஆகியோருடன் தொடர்புடைய வளாகங்களில் கடந்த 8ம் தேதி நடநந்த சோதனைகளில் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து அமலாக்க அதிகாரிகள் கூறுகையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கொல்கத்தா மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் முழுவதும் 4 முதல் 5 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மெர்லின் குழும நிறுவனத்திற்கும் மேற்கு வங்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே உள்ளதாகக் கூறப்படும் நிதித் தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.மெர்லின் குழுமம் கூறுகையில், அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பதாகவும், தங்களது அனைத்துப் பரிவர்த்தனைகளும் வெளிப்படையானவை என்றும் கூறியுள்ளது.
