×

மத்தியபிரதேசத்தில் பாஜ எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் மோதி 5 பேர் காயம்

ஷிவ்புரி: மத்தியபிரதேசத்தில் பாஜ எம்எல்ஏ மகன் ஓட்டி சென்ற கார் மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து எம்எல்ஏவின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தின் பிச்சோர் பேரவை தொகுதி பாஜ உறுப்பினர் பிரீதம் லோதி. இவரது மகன் தினேஷ் லோதி நேற்று முன்தினம் இரவு எஸ்யுவி காரில் சென்றுள்ளார். அப்போது அந்த கார் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

மேலும், நடந்து சென்று கொண்டிருந்த இருவர் மீதும் பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 5 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து பிச்சோர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எம்எல்ஏவின் மகன் தினேஷ் லோதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Madhya Pradesh ,BJP MLA ,Shivpuri ,MLA ,Pritam Lodhi ,BJP ,Pichore Assembly ,Shivpuri district ,Madhya Pradesh.… ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க...