பணிகள் முடியாத நிலையில் வீரபாண்டி பிடிஓ அலுவலகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி, பிப்.23: கட்டிட பணிகள் முடிவடையாத நிலையில், காணொலி காட்சி மூலம் வீரபாண்டி பிடிஓ அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிடம் கட்ட, கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி டெண்டர் விடப்பட்டது. ஜூன் 5ம் தேதி கட்டுமான பணி துவங்கியது. சுமார் 60 சதவீதம் மட்டுமே பணிகள் முடிந்துள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதி எந்நேரத்திலும் அறிவிக்கலாம் என்பதால், அவசர அவசரமாக, தலைவாசலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Related Stories:

More
>