×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 148 கன அடியாக சரிவு

மேட்டூர்: தமிழக- கர்நாடக எல்லையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் இன்று 3வது நாளாக நீர்வரத்து 200 கனஅடியாக நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 195 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 148 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 81.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.46 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 43.43 டிஎம்சி.

Tags : Mettur ,Cauvery ,Tamil Nadu-Karnataka ,Hogenakkal Cauvery ,
× RELATED டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு:...