வாஷிங்டன்: போப் லியோவுடனான வார்த்தை மோதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார். எந்த ஆயுதமும் இல்லாத 42 ஆயிரம் அப்பாவி மக்களை ஈரான் கடந்த 2 மாதங்களில் கொன்றுள்ளது என யாராவது போப்பிடம் கூறுங்கள் என ட்ரம்ப் கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்கா நடத்திவரும் போர்களை சர்வாதிகார மனப்பான்மை என்று போப் குறிப்பிட்டது ட்ரம்ப்பின் கோபத்தை தூண்டியது. போப் லியோவின் அமைதிக்கு ஆதரவான பேச்சுகள், ஈரான் அணு ஆயுத வலிமை பெறுவதை ஆதரிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு தான் அஞ்சவில்லை என்றும், தான் ஒரு அரசியல்வாதியல்ல அமைதிக்காக குரல் கொடுப்பதே தனது பணி என்றும் போப் விளக்கமளித்துள்ளார்.
