- ஈரான்
- பிரதமர்
- இஸ்ரேல்
- பெஞ்சமின் நேடன்யாகு
- யூத இனக்குழப்பு நினைவு
- யூதர்கள்
- நாஜிக்கள்
- இரண்டாம் உலக போர்
இஸ்ரேலில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் யூத இனப்படுகொலை நினைவு தினத்தில் உலகையே உலுக்கும் வகையில் ஒரு ஆவேசமான உரையை நிகழ்த்தி உள்ளார் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களின் கையில் சிக்கி தவித்த யூதர்கள், அன்று ஒரு பலவீனமான விலங்கை போல கதறினார்கள். ஆனால் இன்றைய நவீன இஸ்ரேல் தனது எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தெரிந்த ஒரு வலிமையான நாடு என்று அவர் உரக்க சொல்லி இருக்கிறார். குறிப்பாக யூதர்களுக்கு எதிராக இரண்டாவது முறை ஒரு இனப்படுகொலை நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அந்த வாக்குறுதியை இந்த ஆண்டு செயலில் நிரூபித்து காட்டி உள்ளோம் என்று பெஞ்சமின் நெதன்யாகு முழங்கியது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நியாப்படுத்தி பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, நாங்கள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் நாஜிக்களின் மரண முகாம்களை போலவே ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவுடன் இணைந்து கடந்த ஓராண்டில் ஈரான் மீது நடந்த கூட்டு தாக்குதல்கள் அந்த நாட்டின் தீய ஆட்சிக்கு ஒரு மரண அடியை கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய நிலையை மிக கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, ஐரோப்பா தனது அடையாளத்தையும், விழுமியங்களையும் பாதுகாக்கும் பொறுப்பை இழந்து வருவதாக விமர்சித்தார். “ஆபரேஷன் ரைசிங் லயன்” மூலமாகவும், அதிலும் குறிப்பாக “ஆபரேஷன் ரோரிங் லயன்” மூலமாகவும், இஸ்ரேல் சுதந்திர உலகின் முன்னணியில் அமெரிக்காவுடன் நிற்கிறது.ஈரானில் இருந்த தீய ஆட்சியைத் தூள் தூளாக நசுக்கி உள்ளோம் என்றார். இஸ்ரேல் இன்று தன்னை தற்காத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக நாகரீகத்தை காப்பதாகவும் குறிப்பிட்டார். இஸ்ரேல் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆபத்துகளை முறியடிக்கவும், தனது பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதியான முறையில் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நன்மை எது, தீமை எது என பிரித்து பார்க்க தெரியாத நாடுகள் இஸ்ரேலிடமிருந்து பாடம் கற்று கொள்ளலாம் என்றார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய 2 நாடுகளும் சுதந்திரமான உலகின் முன்னணிகள் என்றும், மோசமான தீய சக்திகளை எதிர்த்து பிரதி வருவதாகவும் கூறினார். இதே நிகழ்வில் பேசிய இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு உணர்வுகளுக்கு மத்தியில், இஸ்ரேல் முன் எப்போதையும் விட வலிமை மற்றும் அதிகாரத்துடன் நிமிர்ந்து நிற்கும். உள்நாட்டு விவகாரங்கள் குறித்து பேசிய ஹெர்சாக்,”நாம் ஒரே குடும்பம்; நமக்கென ஒரு பொதுவான விதி உள்ளது,” என்று ஹெர்சாக் கூறினார். “ஒரு குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் எழலாம்; ஆனால், அது ஒருபோதும் தன்னைத்தானே சிதைத்துக்கொள்ளக் கூடாது.” இந்தப் போராட்டம் நீண்டுகொண்டே சென்றாலும், இறுதியில் இஸ்ரேல் “மேலும் வலிமை பெற்றதாகவும், அதிகாரம் மிக்கதாகவும்” வெளிவரும் என்றார். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் இஸ்ரேலின் தீர்க்கமான நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் மிக்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
