×

துரோகத்தின் மொத்த உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன்

சென்னை: அண்ணாமலையை கட்சிதலைவர் பதவியிலிருந்து நீக்கினால் தான் கூட்டணி வைக்க முடியும் என்று பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்தார் என்று தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி தொகுதி உட்பட்ட நம்பியூரில் துரோகத்தின் மொத்த உருவகமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.

தானே பூமி அடுத்த என்று எடப்பாடி பழனிச்சாமி பெருமை பேசிக்கொள்ள கூடாது. எடப்பாடியை பொறுத்தவரை மனிதநேயமற்றவர் என்பதற்கு இரண்டு மூன்று காரணம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று நான் துரோகம் செய்துவிட்டேன் என்று நினைத்தார் என்ன துரோகம் இவரை முதலமைச்சர் ஆக்கியது துரோகமா பொதுச் செயலாளர் ஆக்கியது துரோகமா?

இரண்டாவதாக பிஜேபி உடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார் ஐபிஸ் அதிகாரி மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் போது கூட்டணி இல்லை என்றார் ஆனால் இன்று எந்த கூட்டணியில் இருக்கிறார்.
சசிகலாவை புறம் தள்ளி துரோகி என்றார் ஜெயில் இருந்து வரும்போது எந்த உதவியும் செய்யக்கூடாது என்றும் கட்சியினருக்கு உத்தரவிட்டார்.

மேலும் சசிகலா 15 நாள் பரோலில் வெளிய வந்த போதும் கட்சிகாரர்களை பார்க்க அனுமதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பிஜேபி அவ்வளவு உதவி செய்தும் 2024 கூட்டணியில் இல்லாமல் தனித்து நின்றார். அதன் பிறகு தேமுதிகவிற்கு ராஜசபா சீட் தருவதாக கூறி ஏமாற்றினார். இப்படி எடப்பாடி செய்த துரோகங்களை அடுக்கி கொண்டே போகலாம். துரோகத்தின் மொத்த உருவம் தான் பழனிசாமி என செங்கோட்டையன் தெரிவித்தார்.

Tags : EDAPPADI PALANISAMI ,CHENNAI ,BJP ,ANNAMALA ,SENGOTAYAN ,SAID SENIOR ,Eadapadi Palanisami ,Nomyuur ,Kobi ,
× RELATED வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை...