×

திண்டுக்கல்லில் வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சரை கேள்வி கேட்டு ஓட விட்ட பொதுமக்கள்!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசனை குடிநீர் வசதி கேட்டு கேள்விகளால் மக்கள் துளைத்தெடுத்தார்கள். காந்திநகரில் அவர் வாக்கு சேகரித்த போது அவரது வாகனத்தை சூழ்ந்த மக்கள் பல வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருந்தும் குடிநீர், சமுதாயக்கூடம் போன்றவை செய்துகொடுக்கவில்லை என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து கேள்விக்கணைகளை தொடுத்த மக்களால் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் மக்கள்களை பார்த்து கட்டுப்பாடு வேண்டாமா. நீங்களே உங்களிடம் விடிய விடிய பேசுங்களே,என மக்களிடம் ஒளறினார் . நாங்க என்ன செய்யுறோம் என்று நீங்க பாக்கலாம் என கூறி கேள்விகளை மழுப்பினர். தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுது என்ற மக்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் வழக்கம்போல திணறினார். நாங்கள் எதிர்க்கட்சி என்று மக்களிடம் கூறி மழுப்பினர்.

Tags : Dindigul ,Former minister ,Dindigul Srinivasan ,Gandhi Nagar ,L. A. Still ,
× RELATED வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை...