- கிருஷ்ணராயபுரம்
- கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கரூர்...
கிருஷ்ணராயபுரம்; ஏப்.16: கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்-136 (தனி) சட்டமன்ற தொகுதியில் கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம், கரூர் ஆகிய தாலுகாவை உள்ளடங்கியது.
இதில் 275 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், தேர்தல் நிலைய கண்காணிப்பு குழுவினர், வீடியோ ஒளிப்பதிவு கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் கிருஷ்ணராயபுரம், உப்பிடமங்கலம், கடவூர், மைலம்பட்டி,காணியளம்பட்டி, வெள்ளியணை உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர வாகனசோதனையி ஈடுபட்டு வருகின்றனர்.
