- கிருஷ்ணராயபுரம்
- ஜெயங்கொண்டம் நகர பஞ்சாயத்து
- கிருஷ்ணராயபுரம்- 136
- தனி
- கரூர் மாவட்டம்
- கிருஷ்ணராயபுரம்…
கிருஷ்ணராயபுரம், ஏப். 16: பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி பகுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்- 136 (தனி) சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
அதன்படி கடந்த 12ம் தேதி முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது. இதில் கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட லட்சுமணம்பட்டியில் அங்கன்வாடி பணியாளர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று.
