×

கிருஷ்ணராயபுரத்தில் அஞ்சல் வாக்கு பதிவு செய்ய பயிற்சி

கிருஷ்ணராயபுரம், ஏப். 13: கிருஷ்ணராயபுரத்தில் வயது முதிர்ந்தவர்களுக்கு அஞ்சல் வாக்கு பதிவு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தலைமையில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்கு நடைபெறுவது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்- 136 (தனி ) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்கு தொடர்பாக மற்றும் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலே வாக்கு செலுத்தும் போது அவர்களின் உரிமைகள் மற்றும் ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொகுதி மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Krishnarayapuram ,Sivakumar ,Krishnarayapuram Taluka Office… ,
× RELATED குளித்தலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு