×

நிலக்கோட்டை பஸ்நிலையத்திற்கு கூலப்ப நாயக்கர் பெயர் வைக்க கோரிக்கை

திண்டுக்கல், பிப். 23: திண்டுக்கல் நிலக்கோட்டை சேர்ந்த ராஜகம்பளத்தார் காப்பு பேரவை சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்தவர்களில் நிலக்கோட்டையை ஆண்ட கூலப்ப நாயக்கர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரது ஆட்சிக் காலத்தில், அவரால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஏராளம் நிலக்கோட்டை நகர் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள 54 கிராமங்களில் நாயக்கர் மற்றும் நாயுடு மக்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். மேலும் கூலப்பநாயக்கரின் வாரிசுகள் இன்றும், நிலக்கோட்டையில் உள்ளனர். அவரை நினைவு கூறும் வகையில், நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்கு கூலப்ப நாயக்கர் பெயர் வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இதில், ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் தலைமையில், ஒன்றிய பொருளாளர் சரவணன் இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nilakkottai ,Kulappa Nayak ,
× RELATED நிலக்கோட்டை அருகே ஊழியர் பணம் திருடி...