×

நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அட்மிட்

லால்குடி: நடிகர் மன்சூர் அலிகான் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாக தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தொண்டையில் வலி ஏற்பட்டு பேச முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று இரவு லால்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் லால்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து போராட்டம் செய்தார். இதனால், ரயில்வே போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mansour Alligan ,Lalgudi ,Mansoor Alikan ,Trichy district ,
× RELATED தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி...