பெரம்பலூரில் 4 பேரை கடித்து குதறிய தெருநாய்கள் பிடிபட்டது

பெரம்பலூர், பிப்.21: பெரம்பலூர் நகராட்சியில் ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வந்து, வாகன விபத்துகளை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களையும் கடித்து துன்புறுத்தி வருகின்றன. இதில் கடந்த சில தினங்களில் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ராதிகா என்பவரது வீட்டின் அருகே சுற்றித் திரியும் தெருநாய்கள், அப்பகுதியில் உள்ள ஒரு குழந்தையையும், தனி யார் பள்ளிக் காவலாளி, பிரின்டிங்பிரஸ் காவலாளி, ஆலம்பாடி பிரமுகர் என 4 பேர்களை கடித்துப் பதம் பார்த்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உத்தரவின்பேரில், நாய்கள் பிடிக்கும் குழுவினரைக் கொண்டு 3 தெருநாய்களைக் கம்பி வலைவீசி பிடித்து அடைத்தனர். நேற்று (20ம்தேதி) கால்நடை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் நாய்களுக்கு ஏற்படும் வெறியை கட்டுப்படுத்தும் தடுப்பூசிக ளைப் போட்டு வெளியில் விட திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories:

More