×

‘நான் ஆட்டோகாரன்’

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பொன்மலை கொட்டப்பட்டு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரை மறித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்களை திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து சுமார் 300 ஆட்டோக்கள் பேரணியாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காக்கி சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டி சென்று வாக்கு சேகரித்தார்.

Tags : DMK ,Thiruverumpur ,Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Ponmalai Kottapattu Road ,
× RELATED சொல்லிட்டாங்க…