×

சிவசேனா, திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறிய அதிருப்தி எம்பிக்களுக்கு லஞ்சம் ரூ.15 கோடியா? ரூ.20 கோடியா?: சஞ்சய் ராவத் பதிவுக்கு மகுவா விளக்கம்

கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக கடும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. மக்களவையில் மொத்தம் இருந்த 28 எம்பிக்களில், கொறடா காகோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 எம்பிக்கள் திடீரென அதிருப்தி குழுவாகப் பிரிந்து சென்றனர். இவர்கள் திரிபுராவைச் சேர்ந்த தேசிய குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்ததோடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பலம் 28 என்பதிலிருந்து வெறும் 8 ஆகக் குறைந்தது. இந்த இக்கட்டான சூழலிலும் கிருஷ்ணாநகர் தொகுதி எம்பி மகுவா மொய்த்ரா, மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக நின்று பிரிந்து சென்றவர்களைக் கடுமையாகச் சாடினார். அதில், ‘பிரிந்து சென்ற 20 எம்பிக்களுக்கு முன்பணமாக 4 கோடி ரூபாயும், அடுத்த 36 மாதங்களுக்குத் தலா 1 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் அணியில் இருந்து வெளியேறிய 6 எம்பிக்களுக்கு தலா 15 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அக்கட்சியின் மூத்த எம்பி சஞ்சய் ராவத் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் மகுவா மொய்த்ரா இவ்வாறு பதிவிட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிருப்தி எம்பிக்கள் 20 பேரும், மகுவா மொய்த்ரா மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அவர்கள், ஆதாரமற்றப் புகாரைக் கூறிய மகுவா மொய்த்ரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.

Tags : Sivasena ,Trinamul ,Sanjay Rawat ,KOLKATA ,FORMER WESTERN ,MAMTA BANERJEE ,Lalakawa ,Korada Kakoli Ghosh Dastidar ,
× RELATED சொல்லிட்டாங்க…