சென்னை: டெல்லி அணிக்கு 213 ரன்களை சென்னை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சென்னையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது. தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.
