×

கன்னங்குறிச்சியில் தொழிலாளியை வெட்டிய 8 பேருக்கு வலைவீச்சு

சேலம், ஏப்.10: சேலம் கன்னங்குறிச்சியில் ெதாழிலாளியை ெவட்டிய வழக்கில் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் கோரிமேடு செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(26). டைல்ஸ் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இவரிடம் வழக்கு ஒன்றில் சமரசம் பேசலாம் என கூறி சிலர் அழைத்துள்ளனர். இதன்படி நேற்றுமுன்தினம் செட்டிச்சாவடி குண்டத்துமேடு என்ற இடத்தில் வைத்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜோசப்(எ)பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் தாக்கியுள்ளனர். கத்தியால் வெட்டிவிட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை அவரது தாய் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், ேஜாசப்(எ)பாலாஜி, ஜீவா உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Kannankurichi ,Salem ,Kannankurichi, Salem ,Shahjahan ,Korimedu Chettichavadi ,
× RELATED முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலிபர் கைது