×

மேட்டுப்பாளையம் அருகே பாக்கு தோப்பில் முகாமிட்ட பாகுபலி யானை: விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் அச்சம்

 

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பாக்கு தோப்பில் முகாமிட்ட பாகுபலி யானையால் விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள்ளும், இரவு வேளைகளில் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அங்கு முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு அருகே தனியாருக்கு சொந்தமான பாக்கு தோப்பில் புகுந்த பாகுபலி யானை அங்கு முகாமிட்டது. இதனை கண்ட விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பாகுபலி யானையை விரட்டி அடித்தனர். நீண்டநேர போராட்டத்திற்கு பின் பாகுபலி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் விவசாயிகள் மட்டுமின்றி தோட்டங்களில் தங்கி பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களும் அச்சத்துடன் பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாகுபலி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : BAKUBALI ,BAKU ,NEAR ,MATHUPPALAYAM ,METUPALAYAM ,BAKU GROVE ,Goa District ,Metuppalayam ,Thekambatty ,Nellitura ,Samayapuram ,Odatura ,Palapati ,Vachinampalayam ,Srinumugai ,Lingapura ,
× RELATED கே.கே.நகரில் அரசியல் கட்சிகள்...