- இந்தியா
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- விழுப்புரம்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- முதல்வர்
- மு. கே. ஸ்டாலின்
- விலப்புரம் மாவட்டம்
விழுப்புரம்: இந்தியா முழுக்க சமூக நீதி என்றால் திமுகதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளர். விழுப்புரத்தில் 7 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; திராவிட மாடல் ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம். 21 சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தை திறந்து வைத்துள்ளோம். சொன்னால் சொன்னதைச் செய்வேன். சமூக நீதியை நிலைநிறுத்திய இயக்கம் மட்டுமல்ல; சமூக நீதி போராளிகளை போற்றும் இயக்கமும் திமுகதான்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீட்டை வழங்கியவர்தான். வன்னியர் பொதுச்சொத்து வாரியம் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ய அமைக்கப்பட்ட கூட்டணிதான் என்.டி.ஏ.. தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்பலி வாங்கிய நீட் தேர்வை அனுமதித்தது அதிமுக ஆட்சியில்தான். மின்கட்டண உயர்வுக்கு காரணமாக இருக்கக் கூடிய உதய் மின் திட்டத்துக்கு கையெழுத்திட்டது அதிமுகதான். ராமதாஸுக்கு இன்றைக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர். திமுகவும் நானும் ராமதாஸை சமூக நீதிப் போராளியாக பார்க்கிறோம், மதிக்கிறோம்.
விவசாயிகளுக்கு எதிரான 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுகதான். இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் அதிக நிதி ஒதுக்கி அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்கிறார்கள். இருமொழிக் கொள்கைக்கு துரோகம் செய்கிறது என்.டி.ஏ. கூட்டணி. பல துரோகங்களை செய்துவிட்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க வருகிறார்கள். என்.டி.ஏ. கூட்டணி என்றால் “No Development Alliance”. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய பாஜக அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது. தோல்வி பயத்தால் ஒவ்வொரு நாளும் பழனிசாமி தாறுமாறாக தரம் கெட்டு பேசுகிறார்.
மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படக் கூடியவனோ நான் அல்ல. எனது 23ம் வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான் என்று கூறினார்.
