×

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைவர், நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் சாய்குமார் ஐஏஎஸ்.

அதேபோல தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம்செய்யப்பட்டுள்ளார். உத்தரவை உடனே அமல்படுத்தி பணியில் சேர்ந்தது குறித்து மாலைக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சட்டம் – ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார். 1995 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றவர்.

Tags : Government of Tamil Nadu ,Department ,TGB ,Chennai ,Chief Secretary of ,Murukanantham ,Tamil Nadu ,Chief Secretary of the ,Government ,of ,
× RELATED இந்தியா முழுக்க சமூக நீதி என்றால் திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்